News September 5, 2025
சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா?

நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை, மலையாளத்தில் வெளியான ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘புறநானூறு’ படத்தில் நஸ்ரியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அப்படம் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் 15 காசுகள் குறைந்து ₹88.27 ஆனது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதால் கடந்த சில தினங்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏற்கெனவே USA-வின் புதிய வரியால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்கள் உள்பட பலருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News September 6, 2025
பாசம் மட்டுமே பாட்டிக்கு உரிமை கொடுத்துவிடாது: HC

பாட்டி, பேரன் இடையேயான பாசம் மட்டுமே குழந்தையை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என மும்பை HC கூறியுள்ளது. பிறந்ததுமுதலே வளர்த்து வந்த தன் பேரனை பிரிய மனமின்றி கோர்ட் வரை சென்றிருக்கிறார் பாட்டி. சொத்து தகராறில், மகனை தன்னிடம் கொடுக்குமாறு தந்தை கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் (பாட்டி) மறுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், 2 வாரத்திற்குள் சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க HC உத்தரவிட்டுள்ளது.
News September 6, 2025
நேற்று செங்கோட்டையன்; இன்று அடுத்த தலைவர்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், காலை 10.30 மணிக்கு, டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார். மதுரையில் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது. NDA கூட்டணியிலிருந்து விலகியது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார்.