News April 3, 2025
அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News April 3, 2025
ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்கு ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தியுள்ளது. திமுக வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்க வேண்டாம் என ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்துள்ள TN பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், ஆ.ராசா அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக பேசியிருப்பதாக சாடியுள்ளார். இதற்காக ஆ.ராசா வருத்தம் தெரிவிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
News April 3, 2025
சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (1/2)

உ.பி. சம்பலில் சிக்கிய போலி மாந்திரீகர்களிடம் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளே அவர்களது குறி. உங்கள் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு மாந்திரீக பூஜை செய்தால் பணம் கொட்டும் என பெற்றோரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் அத்துமீறியுள்ளது. தனியறையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பை வணங்கி பூஜை நடக்குமாம். அதன்பிறகு அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
News April 3, 2025
சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (2/2)

தன்வர்ஷா என அழைக்கப்படும் அந்த கும்பலிடம் இருந்து இதுவரை 200 சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார்களா என போலீஸ் விசாரித்து வருகிறது. பணத்தாசையால் தங்கள் வீட்டு பெண்களின் வாழ்க்கையை பெற்றோரே சீரழித்தது கொடுமையிலும் கொடுமை.