News April 5, 2025
மோடி பயணத்தால் மீன்பிடி உரிமை கிடைக்குமா?

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், TN மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட மீன்பிடி உரிமையை நாம் பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். திமுக MP டி.ஆர்.பாலுவும் கச்சத்தீவுக்காக மக்களவையில் குரல் எழுப்பியிருந்தார்.
Similar News
News November 28, 2025
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (நவ.28) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.46, கத்தரிக்காய்: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.12, அவரைக்காய்: ரூ.46, கொத்தவரை: ரூ.30, பச்சைமிளகாய்: ரூ.28-30, பப்பாளி: ரூ.24, கொய்யா: ரூ.45 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News November 28, 2025
மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.


