News April 15, 2025
இரண்டாக உடையும் மதிமுக?..வைகோ சமரசம்

மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி 2ஆக பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ஆம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
ராசி பலன்கள் (10.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 10, 2026
காங்கிரஸ் யாருடன் கூட்டணி? மீண்டும் ராகுல் ஆலோசனை

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட காரணங்களால் திமுக, காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ராகுல் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி குறித்து தமிழக தலைவர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கருத்துக்கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
ஏப்.13-ல் தமிழகத்திற்கு தேர்தல்?.. வந்தாச்சு அப்டேட்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்.13-ம் தேதி நடத்த ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, 10 நாள்களுக்கு பிறகு வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை மறுநாள்(பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதியை இறுதி செய்து அறிவிப்பு வெளியாகும்.


