News August 3, 2024
பதக்க வேட்டையை தொடர்வாரா மனுபாக்கர்?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ள 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் இறுதிப்போட்டியில் மனுபாக்கர், தனது 3ஆவது பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று, ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
Similar News
News December 1, 2025
டிசம்பர் 1: வரலாற்றில் இன்று

*1900 – இதழாளர் சாமி சிதம்பரனார் பிறந்தநாள். *1947 – கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மறைந்த நாள். *1955 – பாடகர் உதித் நாராயண் பிறந்தநாள். *1988 – உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு. *1990 – அரசியல்வாதி விஜயலட்சுமி பண்டிட் மறைந்த நாள். *1997 – பிஹாரின், லக்ஷ்மண்பூர் பதேவில் ரன்வீர் சேனா அமைப்பு நடத்திய தாக்குதலில் 63 தலித்துகள் கொலை.
News December 1, 2025
இந்தியாவில் HIV-AIDS பாதிப்பு குறைவு

இந்தியாவில் 2010-2014-க்கு உட்பட்ட காலக்கட்டத்தில் HIV-AIDS பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய பாதிப்பு அளவு 48.7% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், உயிரிழப்போர் எண்ணிக்கை 81.4% குறைந்துள்ளதாகவும், தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் பாதிப்பும் 74.3% சரிந்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 2024-25-ல் பரிசோதனை எண்ணிக்கை 6.62 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
சச்சின் டெண்டுல்கர் பொன்மொழிகள்!

*உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *விமர்சனங்களை உங்களின் வெற்றிப் படிகட்டுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை.


