News October 6, 2025
தீபாவளி பட்டாசாக OTT-க்கு வரும் லோகா?

‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்.20-ம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இப்படம் திரைக்கு வந்த 2 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், அதை படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மறுத்திருந்தார். ₹30 கோடியில் உருவான இப்படம், உலகம் முழுவதும் ₹300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
Similar News
News October 6, 2025
தீபாவளி போனஸ் ₹3,000.. அறிவித்தது தமிழக அரசு

அரசு பொதுத்துறை சி, டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு <<17928254>>20% தீபாவளி போனஸ்<<>> வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்தார். இதில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ₹3,000 கருணை தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான போனஸ் தனியாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 6, 2025
7 மாநில இடைத்தேர்தல் அறிவிப்பு

7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், தெலங்கானா, பஞ்சாப், மிசோரம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
News October 6, 2025
இருமல் டானிக் விவகாரம்: டாக்டர் மட்டுமா பொறுப்பு?

ம.பி.,யில் <<17921980>>இருமல் டானிக் <<>>குடித்த 16 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், டாக்டர் சோனியை கைது செய்ததற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஒரு டாக்டர் மட்டும் இதற்கு பொறுப்பாக முடியுமா எனவும், அந்த குறிப்பிட்ட மருந்து நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அந்த டாக்டரை விடுவிக்க மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.