News February 22, 2025

பாக்.கிற்கு எதிராக கோலி நாளை விளையாடுவாரா?

image

CT போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், கோலி, ராேஹித் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. ஆனால் கோலியின் இடதுகாலில் ஐஸ் பேக் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு காலில் காயமா? நாளை அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News

News February 23, 2025

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

image

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

News February 23, 2025

கங்கை நதியின் அதிசய சக்தி.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

image

கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறி தெரிவித்துள்ளார். நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) உள்ளதாகவும், இவை மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளை கொன்று சுத்திகரிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

News February 23, 2025

ஹிட்லரின் மறு உருவம் ஜக்தீப் தன்கர்: TKS இளங்கோவன்

image

தன்னை கொடுங்கோலராக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் காட்டிக்கொள்வதாக திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். ஹிட்லரின் மனப்பான்மையை தன்கரின் பேச்சு காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, ஒரு நிலத்தை கைப்பற்ற அதன் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என தன்கர் பேசியிருந்தார்.

error: Content is protected !!