News February 23, 2025
வரலாற்று சாதனை படைப்பாரா கோலி?

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கிங் கோலி வரலாற்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14,000 ரன்களை தொடர கோலிக்கு இன்னும் 15 ரன்களே தேவை. அதனை அவர் எடுத்தால், சச்சின், சங்ககாராவுக்கு அடுத்தபடியாக அந்த மைல்கல்லை எட்டிய 3 ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதனால், இன்றைய ஆட்டத்தை கோலி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Similar News
News February 23, 2025
3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்: PM

இன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பட்ஜெட்டில் கேன்சர் சிகிச்சை தொடர்பாக வெளியான பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டினார். அதில் கேன்சர் சிகிச்சை மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.
News February 23, 2025
வலியால் அவதிப்படும் முகமது ஷமி

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பும்ராவும் இல்லாததால், ஷமியின் தேவை அவசியமாகிறது. ஆகையால், கணுக்கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் விளையாடி வருகிறார். அதன் தாக்கமாக, முதல் ஒவரிலேயே அவர் 5 Wide Ball வீசினார். பின்னர், 5ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின், மீண்டும் பந்துவீசத் தொடங்கினார்.
News February 23, 2025
விடுபட்டோருக்கு விரைவில் ரூ.1,000: அமைச்சர் KKSSR

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் சேராமல் உள்ள பெண்கள், அரசு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், விடுபட்டோரில் தகுதியானோருக்கு விரைவில் ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.