News February 25, 2025
சச்சின் சாதனையை கோலி முறியடிப்பாரா? Chances என்ன?

அதிக ODI சதங்களின் பட்டியலில், கோலி நிச்சயமாக சச்சினை முந்துவார். ஆனால், ஒட்டுமொத்தமாக சச்சினின் 100 சதங்களின் ரெக்கார்டை கோலி முந்துவாரா என்பதே கேள்வி. கோலி 82 சதங்களை அடித்துள்ளார். 2027 ODI உலக கோப்பை விளையாட வாய்ப்புகள் உள்ளன. 2 ஆண்டுகள் இருப்பதால், கோலி இச்சாதனையை முறியடிப்பார் என்றே ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர் தனது கேரியரின் உச்சத்தில் இருக்க வேண்டும்! சாதிப்பாரா கோலி?
Similar News
News February 25, 2025
ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடு, பிரென்ட் கச்சா விலை அதிகரிப்பு ஆகியவை இன்று எதிராெலித்தது. இதனால் இன்று (பிப்.25) காலை வர்த்தக நேரத் தொடக்கத்தில் ரூ.86.72ஆக இந்திய ரூபாய் மதிப்பு இருந்தது. பின்னர் சட்டென 16 காசுகள் சரிந்து ரூ.86.88ஆக வர்த்தகமானது.
News February 25, 2025
ஜீவாவுக்கு ராஷி கன்னா செய்த சத்தியம்

பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ராஷி கன்னா பிராமிஸ் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘அகத்தியா’ பட புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இப்படத்திற்காக இயக்குநர் பா.விஜய் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 25, 2025
மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை: அதிகாரிகள் தகவல்

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டப்பட்டதில் மேற்பகுதி இடிந்து விழுந்து, பொறியாளர்கள் உள்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 4வது நாளாக நடக்கும் மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தொடர்கிறது.