News March 28, 2025

இன்று புதிய சாதனை படைப்பாரா ‘கிங்’ கோலி?

image

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனை படைத்துவரும் விராட் கோலிக்காக, மற்றொரு சாதனை காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் 55 ரன்கள் எடுத்தால், அவர் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் ஆவார். இதுவரை, கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக்(13,557), பொல்லார்ட் (13,537) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் கோலி சாதிப்பாரா?

Similar News

News December 6, 2025

ICC விருது: ஷபாலி வர்மாவுக்கு கிடைக்குமா?

image

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இறுதிப்போட்டியில் 87 ரன்கள் குவித்ததுடன் 2 விக்கெட்களும் வீழ்த்தி இந்தியா மகுடம் சுடுவதற்கு உதவினார். இப்பட்டியலில் தாய்லாந்தின் புத்தவோங், UAE-ன் ஈஷா ஒசாவும் உள்ளனர். எனினும், ஷபாலிக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

News December 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

News December 6, 2025

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *கோமதி சங்கரின் ‘STEPHEN’ : டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ரே’: டிச.5, ஜியோ ஹாட்ஸ்டார் * ரஷ்மிகாவின் ‘The Girlfriend’: டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *அஸ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’: டிச.5, ஆஹா *விதார்த்தின் ‘குற்றம் புரிந்தவன்’: டிச.5, சோனி லைவ் *வைபவின் ‘The Hunter’ Chapter 1: டிச.5, ஆஹா

error: Content is protected !!