News December 31, 2024
சாதனை படைப்பாரா ஜெய்ஸ்வால்?

ஆஸி.,க்கு எதிரான 5ஆவது டெஸ்டில் மேலும் 84 ரன்கள் எடுத்தால், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார். 2024இல் இதுவரை 1,478 ரன்களை எடுத்துள்ள அவர், அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக, 2010இல் சச்சின் 1,562 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 1979இல் கவாஸ்கர் 1,555 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 13, 2026
அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News March 13, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $64 (இந்திய மதிப்பில் ₹5,913) குறைந்து $5,108 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.44 குறைந்து $84 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
News March 13, 2026
தேமுதிகவால் கூட்டணியில் நெருக்கடியா? பிரேமலதா

தேமுதிகவுக்காக, நீண்டகாலமாக கூட்டணியில் இருக்கும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீட்டில் திமுக நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி கட்சிகளுக்கு எந்த நெருக்கடியும் இல்லை; எல்லா கட்சித் தலைவர்களும் தன்னுடன் நட்புடன் இருக்கிறார்கள். நீங்கள் (செய்தியாளர்கள்) சொல்வதைபோல் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.


