News April 29, 2024

முதல் ஐபிஎல் சதம் விளாசிய வில் ஜாக்ஸ்

image

GT-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் வில் ஜாக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 4 Four, 10 Six என விளாசி ரசிகர்களை கவர்ந்தார். 31 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அடுத்த 10 பந்துகளில் 46 ரன்கள் குவித்து சதம் விளாசினார். இது அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். அவரது அசத்தலான பேட்டிங்கால், RCB அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Similar News

News November 14, 2025

இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா? ஸ்வைப் பண்ணுங்க

image

உலகில் உள்ள பல வித்தியாசமான விஷயங்கள் பெரும்பாலும், அனைவருக்கும் தெரிவதில்லை. சிலர் அதை ஆர்வத்துடன் தேடி தெரிந்துகொள்கின்றனர். நீங்கள், இதுபோன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? மேலே உள்ள போட்டோக்களில், சில தகவல்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

News November 14, 2025

MGB கூட்டணியை தோல்விக்கு இட்டுச் சென்ற 5 விஷயங்கள்

image

*குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகள் மக்களை கவரவில்லை *கூட்டணியில் குழப்பம்- ஆர்ஜேடி, காங்., இடையே இருந்த தொகுதி உடன்பாடு சர்ச்சை தேர்தலில் எதிரொலித்துள்ளது *தன் பலத்தைவிட அதிகமான தொகுதிகளை காங்., பெற்றது *மிகப் பிற்படுத்தப்பட்டோர், தலித் வாக்காளர்களை யாதவ் லாபி புறக்கணித்தது. *ராகுலின் ‘வாக்கு திருட்டு’ பிரசாரம் உதவும் என அதிகமாக நம்பியது. உங்க கருத்து?

News November 14, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… இனிமேல் கிடைக்காது

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இனிமேல் தகுதியான மகளிர் கூட விண்ணப்பிக்க முடியாது. அனைத்து மாவட்டங்களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மனுக்களை பரிசீலிக்கும் பணி நவ.30-ம் தேதிக்குள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தகுதியானோருக்கு டிச.15-ம் தேதி முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும்.

error: Content is protected !!