News September 26, 2025
இனி மாதம் ₹2000-ஆக உயர்வா?

மாணவ, மாணவிகளுக்கு மாதம் ₹1000-ஐ TN அரசு வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய மாணவர் ஒருவர், ₹1000 போதவில்லை, உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனே கைதட்டி சிரித்துக் கொண்டே CM ஸ்டாலின் வரவேற்றார். தேர்தலுக்கு முன், இதுபற்றி அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News September 26, 2025
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சிறந்த உணவுகள்

கல்லீரல் கழிவுப் பொருள்களை உடலில் இருந்து வெளியேற்றவும், செரிமானம், உயிரணு உற்பத்தி ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலே, கல்லீரலுக்கான சிறந்த உணவுகளை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News September 26, 2025
Stock Market பங்குகள் விலை கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் சோதனை காலமாக அமைந்துள்ளது. இன்று தொடர்ந்து 6-வது நாளாக சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிந்து 80,426 புள்ளிகளுடனும், நிஃப்டி 236 புள்ளிகள் சரிந்து 24,654 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
News September 26, 2025
அக்.1-ல் SK-வின் ‘மதராஸி’ OTT-யில் வெளியாகிறது

ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், படம் பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடி வசூலை கடந்தது. படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான சூழலில், வரும் அக்டோபர் 1-ம் தேதி அமேசான் ப்ரைம் OTT-ல் வெளியாக உள்ளது. ருக்மிணி வசந்த, வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.