News April 7, 2025
இந்தியாவின் GDP வளர்ச்சி பாதிக்குமா?

அமெரிக்கா விதித்த 26% சதவீத இறக்குமதி வரியால், இந்தியாவின் GDP வளர்ச்சி சற்று மந்தமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் RBI தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைக்க நேரிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்குப் பின் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.3% இருந்து 6.1% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 30, 2025
BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?

மீண்டும் ADMK ஆட்சி மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு என கூறிய அவர், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை அசுர பலத்துடன் சந்திப்போம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே இதே கருத்தை OPS-ம் முன்வைத்திருந்தார். உங்கள் கருத்து?
News August 30, 2025
உடற்தகுதி தேர்வுக்கு செல்லும் ரோஹித் சர்மா

செப்.13-ல் உடற்தகுதி தேர்வுக்கு ரோஹித் சர்மா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ODI கேப்டனாக உள்ள அவர், உடற்தகுதிக்கான Yo-Yo மற்றும் Bronco டெஸ்ட் எடுக்கவுள்ளார். இந்திய அணி, ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளில் ரோஹித் ஈடுபட்டு வருகிறார். IPL-க்கு பிறகு வெளிநாடுகளில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ரோஹித், தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
News August 30, 2025
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்? ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதிய கட்சிகள் திமுக பக்கம் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனர் என்று CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றை மிஞ்சி திமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.