News October 19, 2025

கைது செய்யப்படுவாரா இஸ்ரேல் PM நெதன்யாகு?

image

இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட்டை ரத்து செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மறுத்துள்ளது. காஸா போர் தொடர்பான போர் குற்றங்களுக்காக இஸ்ரேல் PM நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக ICC கைது வாரண்ட்களை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரி 2-வது முறையாக இஸ்ரேல் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ICC நிராகரித்துள்ளது.

Similar News

News October 19, 2025

பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இத்தனை கோடியா?

image

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மாபெரும் வெற்றியால் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநரானார். ₹5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ₹100 கோடி வசூலை குவித்தது. இப்படத்திற்காக முதலில் ₹70 லட்சம் சம்பளம் வாங்கிய பிரதீப், மெகாஹிட்டால் கூடுதலாக ₹80 லட்சம் பெற்றுள்ளார். டிராகன், LIK ஆகிய இரு படங்களுக்கும் சேர்த்து ₹17 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

News October 19, 2025

டெல்லியின் பெயரை மாற்ற கோரும் VHP

image

டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ (Indraprastha) என மாற்ற வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, டெல்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் தலைநகரை, அதன் பண்டைய வரலாறு & கலாசாரத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட், ரயில் நிலையத்தின் பெயரை மாற்றவும் VHP கோரியுள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2025

20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

image

மஞ்சள் அலர்ட்டால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், தி.மலை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளி ஷாப்பிங் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்க!

error: Content is protected !!