News July 27, 2024

இந்திய இளம்படை இன்று சாதிக்குமா?

image

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சூர்யகுமார் தலைமையிலான இளம் அணி இன்று களமிறங்குகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

Similar News

News March 9, 2026

தமிழக தேர்தல்: வங்கிகளின் கெடுபிடியால் மக்கள் அவதி!

image

TN தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. வங்கிகளின் பிரதிநிதிகளாக உள்ள BC-க்கு(Business Correspondent) வழங்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. BC-க்கு நாளொன்றுக்கு ₹1,00,000, தனி நபருக்கு ₹5,000 மட்டுமே வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கிராமப்புற மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News March 9, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி இறுதியானது

image

தவெக <<19333933>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட உள்ளதாகவும், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன், கரூரில் மதியழகன், கோபியில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், எழும்பூரில் ராஜ்மோகன், அம்பத்தூரில் ஜே.சி.டி பிரபாகர் களம் காண இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 9, 2026

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

image

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!