News October 23, 2024
ஜெர்மனியை பழித்தீர்க்குமா இந்தியா?

டெல்லியில் நடக்கும் ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகத் தரவரிசையில் No-2 ஆக உள்ள ஜெர்மனியிடம் பாரிஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய அணி தோற்றது. அந்த தோல்விக்கு பதிலளிக்கும் வகையில், ஹர்மன்பிரீத் சிங் தலைமையான இந்திய அணி இன்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டியில் இந்தியா 3இல் வெற்றி பெற்றுள்ளது.
Similar News
News January 8, 2026
தி.மலை மக்களுக்கு பொங்கல் பரிசு !

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்டவலம் அடுத்த கீரனூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தை மாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன், ரேஷன் கடை கூட்டுறவு விற்பனையாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம்.
News January 8, 2026
தணிக்கை குழுவினர் மோசமானவர்கள் அல்ல: சுதா

தணிக்கை பிரச்னையில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், சென்சார் போர்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், தணிக்கை குழுவினர் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என ‘பராசக்தி’ இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ‘பராசக்தி’ படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை என்றும், படத்தை அவர்கள் ரசித்ததாகவும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
அதிமுகவில் OPS இல்லை.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுகவில் OPS, சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பேசியபின், EPS தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் TTV தினகரன் இடம் பெறுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக கூறியுள்ளார். இதனால், NDA கூட்டணியில் TTV-யை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


