News October 26, 2024
சொந்த மண்ணில் சாதிக்குமா இந்தியா

NZ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் IND அணி வெற்றி பெற 359 ரன்கள் எடுக்க வேண்டும். IND அணிக்கு இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ENG அணிக்கு எதிராக சென்னையில் 2008-ல் 387 ரன்களை மட்டுமே IND வெற்றிக்கரமாக சேஸ் செய்துள்ளது. மற்ற 25 போட்டிகளில் 14 தோல்வி, 9 டிரா, 1 டை ஆகியுள்ளது. சொந்த மண்ணில் IND அணி மீண்டும் சாதிக்குமா?
Similar News
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய்க்கு அதிர்ச்சி

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று நல்லதொரு உத்தரவை வழங்கும் என காத்திருந்த விஜய் தரப்புக்கு <<18862962>>மனு தள்ளுபடியானது<<>> அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், பொங்கல் சினிமாவுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக ‘ஜன நாயகன்’ படம் வெளியேறிவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் தங்களது சோகத்தை SM-ல் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும், 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
News January 15, 2026
திமுக அரசின் மீதான கரும்புள்ளி: நயினார்

ஆசிரியர் விஷம் குடித்து <<18857511>>தற்கொலை <<>>செய்துகொண்டது வேதனையளிப்பதாக நயினார் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உங்க கனவ சொல்லுங்க’ என விளம்பர நாடகம் போடும் CM ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த துர்மரணம். இது திமுக அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு 2026-ல் முடிவு கட்டப்படும் என்றார்.
News January 15, 2026
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவள்ளுவர் தினமான நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, டாஸ்மாக், பார்கள் திறந்தாலோ, கள்ளச்சந்தையில் விற்றாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி முதல் ஜன.17 பிற்பகல் 12 மணி வரை மது வாங்க முடியாது. இதன் காரணமாகவும், பொங்கல் பண்டிகை என்பதாலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறந்த உடனே கூட்டம் அலைமோதுகிறது.


