News August 2, 2024
வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?

இலங்கை – இந்தியா இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின் ரோஹித், கோலி களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். முன்னதாக, இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News August 19, 2025
மயில்சாமி அண்ணாதுரையை வைத்து தேர்தல் கணக்கு?

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.