News April 5, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்தால் இழப்பீடு கிடைக்குமா?

image

வீட்டு உபயோக கேஸ் வெடித்து உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை பெற முடியும். அதற்கென குழு காப்பீடு போன்ற ஒரு காப்பீட்டை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கின்றன. அதன்படி கேஸ் வெடித்து தனிநபர் இறந்தால் ₹6 லட்சம் வரைக்கும் காப்பீடு கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ, சொத்துகள் சேதமடைந்தாலோ முறையே தலா ₹2 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். SHARE IT

Similar News

News September 19, 2025

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

image

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, தினசரி சில உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை மேலே உள்ள புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளோம். படங்களை swipe செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் அன்பானவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News September 19, 2025

டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

image

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

News September 19, 2025

கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்: TN-க்கு எத்தனையாவது இடம்?

image

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.71 லட்சமாக உயர்ந்திருப்பது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ல் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது 90% அதிகரித்துள்ளது. 1.78 லட்சம் குடும்பங்களுடன், இந்திய கோடீஸ்வரர்களின் தலைநகராக மகாராஷ்டிரா விளங்குகிறது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

error: Content is protected !!