News December 14, 2024

3ஆவது டெஸ்டில் ஓப்பனிங்கா? மிடில் ஆர்டரா?

image

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 2ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவரிசை (மிடில்) ஆட்டக்காரராக விளையாடினார். ஆனால் அப்போட்டியில் அவர் சரிவர ரன் குவிக்கவில்லை. இதனால் விமர்சனத்துக்கு ஆளான ரோஹித், 3ஆவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். ஆதலால் இன்று தொடங்கும் 3ஆவது போட்டியில் ரோஹித் தொடக்க ஆட்டக்காரரா? நடுவரிசை ஆட்டக்காரரா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Similar News

News March 5, 2026

மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 மகிழ்ச்சி செய்தி

image

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், முதல் அறிவிப்பாக இது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் எப்போது விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

News March 5, 2026

விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

image

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2026

2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

image

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

error: Content is protected !!