News August 14, 2025

HDFC மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பா?

image

ICICI வங்கி புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்கள் இனி மாதம் ₹50,000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்தது சர்ச்சையானது. இதனையடுத்து HDFC வங்கியும் தன்னுடைய மினிமம் பேலன்ஸ் தொகையை ₹25,000 வரை உயர்த்துவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும், சேமிப்பு கணக்கின் மினிமம் பேலன்ஸ் ₹10,000 தான் எனவும் HDFC விளக்கமளித்துள்ளது.

Similar News

News August 14, 2025

வலுப்பெற்ற காற்றழுத்தம்.. 7 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 20-ம் தேதி வரை கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் இன்று மழை பெய்யக்கூடுமாம். உங்க பகுதியில் இப்போ மழையா?

News August 14, 2025

அஜித் உடன் இணையத் தயார்: லோகேஷ்

image

புதுமுகங்கள் மூலம் அறிமுகமான லோகேஷ், கைதி திரைக்கதை மூலம் டாப் ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த வரிசையில் அஜித்துடன் அவர் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது படம் பண்ணுவேன் என்று லோகேஷ் கூறியுள்ளார். தெறிக்கவிடலாமா!

News August 14, 2025

விண்ணை முட்டும் விமான கட்டணங்கள்

image

தொடர் விடுமுறைகள் வந்தால் போதும் பஸ், விமானக் கட்டணங்களை நிறுவனங்கள் உயர்த்தி விடுகின்றன. இன்று ஆம்னி <<17398729>>பஸ் கட்டணம்<<>> பலமடங்கு உயர்ந்த நிலையில், விமான டிக்கெட்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு தற்போது கட்டணம் ₹16,769 ஆக (வழக்கமாக ₹4,000) உயர்ந்துள்ளது. அதேபோல், தூத்துக்குடிக்கு ₹21,867 (₹3,843), திருச்சிக்கு ₹14,518 (₹1,827), கோவைக்கு ₹15,546 (₹3,818) கட்டணம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!