News November 19, 2024

Chrome-க்கு ‘குட் பை’ சொல்லுமா கூகுள்

image

இண்டர்நெட்டில் தேட நம் முதல் சாய்ஸ், கூகுள். அந்த கூகுள் Chrome பிரவுசரில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே 89% பேர் Chrome தான் பயன்படுத்துகின்றனர். இதை உத்தியாக கொண்டு, internet search market, AI development-ல் கூகுள் பெரும் வருமானம் ஈட்டுவதாகவும், இந்த ஏகபோகத்தை தடுக்க Chrome-ஐ விற்க, தாய் நிறுவனம் Alphabet-ஐ நிர்பந்திக்க அமெரிக்க நீதித்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்புகாரை கூகுள் மறுத்துள்ளது.

Similar News

News March 12, 2026

வன்கொடுமை வழக்கில் டிவிஸ்ட்… மாணவி பொய் புகார்

image

திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்டுக்காக வந்த <<19360067>>மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் இருந்து TN-ஐ பெரும் பரபரப்பாக்கிய வழக்கில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், மாணவி அளித்தது பொய் புகார் என தெரியவந்தது. மன அழுத்தத்தில் அப்படி புகாரளித்தாக மாணவி கூறியுள்ளார்.

News March 12, 2026

கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

image

மக்களின் வாழ்க்கைமுறை, மரபணு & வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் & தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வருமாம்.

News March 12, 2026

அதிமுகவுடன் கூட்டணி.. கடைசிநேரத்தில் அறிவித்தார்

image

NDA கூட்டணியில் புதிய கட்சியாக முல்லை மக்கள் பேரவை இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற NDA கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நாசே ராமச்சந்திரனும் பங்கேற்றார். இதனையடுத்து, வரும் தேர்தலில் NDA-வுக்கு முல்லை மக்கள் பேரவை ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸில் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நாசே ராமச்சந்திரன், புதிய கட்சி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!