News May 23, 2024
ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை அளிப்பேன்: யுவராஜ் சிங்

டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தரக்கூடிய அபரிமிதமான திறமை ரிஷப் பண்ட்டிடம் இருப்பதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், நான் தேர்வுக்குழுவில் இருந்தால், விக்கெட் கீப்பர் இடத்திற்கு சாம்சனை விட ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை அளிப்பேன். சாம்சனும் சூப்பர் பார்மில் உள்ளார். தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் விளையாடுவார் என்றார்.
Similar News
News September 15, 2025
இந்தியர் கொலைக்கு பைடன்தான் காரணம்: டிரம்ப்

USA-ல் இந்தியரான சந்திரமௌலி நாகமல்லையா கொலை செய்யப்பட்டதற்கு ஜோ பைடனின் கையாளாகாத ஆட்சிதான் காரணம் என டிரம்ப் சாடியுள்ளார். பைடன் ஆட்சியில் கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்தான் இக்கொலையை செய்ததாகவும், தன்னுடைய ஆட்சியில் USA மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், கைதான நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
அஜீரணப் பிரச்னையை சரிசெய்யும் மூலிகை தேநீர்!

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE.
News September 15, 2025
ராமேஸ்வரம் – காசிக்கு இலவச ஆன்மிக பயணம்

தமிழகத்தில் 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ, www.hrce.tn.gov.in இணையதளத்திலோ டவுன்லோடு செய்து, வரும் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60 -70 வயதிற்குள்ளும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.