News March 10, 2025
இப்போதே வேட்பாளரை தேர்வும் செய்யும் இபிஎஸ்?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான் தங்கம் நிறுத்தப்படுவதாக இபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான் தங்கம் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள நிலையில், இந்த முறை எம்எல்ஏ ஆக வேண்டும், வேட்பாளர் நீதான் என இபிஎஸ் உறுதியளித்துள்ளாராம்.
Similar News
News March 10, 2025
இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2025
KV பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 45 KV பள்ளிகளில், சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பால்வாடிகா என்ற KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது. அதன்படி, <
News March 10, 2025
போராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக TN அரசால் நடத்தப்படும் ‘செட்’ தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 4,000 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை, செட் தேர்வு நடத்தி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.