News February 2, 2025

மன்னிப்புக் கேட்பாரா இபிஎஸ்?.. அமைச்சர் பதிலடி

image

கைதான சந்தூரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என தனது பின்புலத்தை ஒப்புக் கொண்டுள்ளார். திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என அமைச்சர் ரகுபதி கடுமையாக சாடியுள்ளார். வீண் பழி சுமத்தி சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. வீராவேசமாக அறிக்கைவிட்ட இபிஎஸ் மன்னிப்புக் கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 3, 2026

தவெகவுடன் காங்கிரஸா? செல்வப்பெருந்தகை

image

தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வெளியாகும் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச கட்சித் தலைமை, மாநிலத் தலைவரான தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், பின்வாசல் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்ற அவர், திமுகவுடனே கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.

News March 3, 2026

மாரடைப்பு வருவதை முன்பே கண்டறிய..

image

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

News March 3, 2026

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

image

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!