News July 6, 2025
டெஸ்ட் வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?

2-வது டெஸ்டில் இங்கிலாந்து 608 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு தனது பேட்டிங்கை தொடங்கிவிட்டது. ஆனால் இங்கிலாந்து இந்த இலக்கை எட்ட முடியுமா? இதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 418 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?
Similar News
News July 6, 2025
தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

அமித்ஷா நாளை(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார். மேலும், பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News July 6, 2025
மணம் வீசும்.. மசாலா வாசம்! உலக பிரியாணி தினம் இன்று!

ஆண்டுதோறும் ஜூலையின் முதல் வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பிரியாணி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய, கலாச்சார உணவாக உருவெடுத்து இருக்கும் பிரியாணி மெனுவில் இல்லையென்றால், அந்த ஹோட்டலுக்கு நம்மில் பலரும் போகவே மாட்டார்கள். சிக்கன், மட்டனில் தொடங்கி மண்பானை, மீன் பிரியாணி என பல வகைகளும், ஹைதரபாதி, சிந்தி பிரியாணி என பிராந்தியங்களுக்கு ஏற்பவும் பல வெரைட்டிகள் உள்ளன. உங்களுக்கு பிடிச்ச பிரியாணி எது?
News July 6, 2025
அஜித் மரணம்: நடிகர்கள் வேதனையுடன் இரங்கல்

அஜித்குமார் மரணத்திற்கு ராஜ்கிரண், எம்.எஸ்.பாஸ்கர், தாடி பாலாஜி ஆகியோர் இரங்கலுடன் போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இதுபோன்று பல சம்பவங்களை நம்முடைய போலீஸ் கையாளும் விதமும், அலட்சியப் போகும் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட வேண்டியவை. நம்முடைய சமூகம் என்பது மனித உரிமைகள் என்னும் மெல்லிய நூலிழையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.