News August 10, 2025

மின்சார கட்டணம் உயருமா? SC-யின் புதிய உத்தரவு

image

SC-யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவை தொகையையும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவிட்டுள்ளது. 2024 கணக்கின்படி, தமிழக அரசு ₹87,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.

Similar News

News August 10, 2025

ஒரே படத்தில் 30 முத்தக் காட்சிகளா!

image

திரைப்படங்களில், குறிப்பாக பாலிவுட் படங்களில் 2000-க்கு பிறகுதான் முத்தக் காட்சிகள் அதிகம் இடம்பெறத் தொடங்கின. 2013-ல் வெளியான 3G படத்தில் 30 lip lock காட்சிகள் இருந்தன. ஆனால், அந்த படம் பெரிய ஃபிளாப் ஆனது. அதன்பின் வெளியான Murder-ல் 20 முத்தக்காட்சிகள், Shuddh Desi Romance-ல் 27 காட்சிகளும், Befikre படத்தில் 25 முத்தக்காட்சிகளும் இடம்பெற்றன. ஆனாலும், இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

News August 10, 2025

ஆக.15 முதல் ₹3,000 பாஸ் அமல்.. ரெடியா இருங்க!

image

ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘ராஜ்மார்க் யாத்ரா’வில் பெறலாம். SHARE IT.

News August 10, 2025

வெற்றி கூட்டணி அமைப்பேன்: ராமதாஸ் உறுதி

image

10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தாங்கள் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு தாங்காது என ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம் என்றும் கேள்வி எழுப்பினார். 2026 தேர்தலுக்கு வெற்றி கூட்டணி அமைக்கப் போவதாக தெரிவித்த ராமதாஸ், தான் சொல்வது நடக்கும் எனவும் உறுதிபட கூறினார்.

error: Content is protected !!