News August 31, 2025

தொகுதிகளை பறிக்கும் திமுக? டென்ஷனில் காங்கிரஸ்

image

கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற அதே தொகுதிகளில் இம்முறையும் போட்டியிட காங்., திட்டமிடுகிறதாம். ஆனால், திமுக நிர்வாகிகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனராம். அதன்படி, காரைக்குடி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, ஊட்டி, அறந்தாங்கி, நாங்குநேரி தொகுதிகள் ’கை’விட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ‘தொகுதியை கொடு, இல்லன்னா கூட்டணியை விடு’ என சத்யமூர்த்தி பவன் கொதிக்கிறதாம்.

Similar News

News September 1, 2025

TNPSC-யில் அய்யா வைகுண்டர் அவமதிப்பு: அண்ணாமலை

image

TNPSC தேர்வில் TN அரசு பொறுப்பின்றி நடப்பது வேதனையளிப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயர், ‘The god of hair Cutting’ என தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே, பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

News September 1, 2025

SCO: இவ்வளவு பெரிய அமைப்பா!

image

நேட்டோ, பிரிக்ஸ், சார்க் போல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அவ்வளவு பிரபலமில்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பே இதுதான் என்பது தெரியுமா? உலகின் நிலப்பரப்பில் 24%, உலக மக்கள்தொகையில் 42%, உலக ஜிடிபியில் 23%, PPP அடிப்படையிலான ஜிடிபியில் 36%-ஐ SCO உறுப்பு நாடுகள் பங்களிக்கின்றன. புவி அரசியலால் சற்றே தளர்ந்த இந்த அமைப்பு மோடி-புடின் -ஜீ ஜின்பின் கூட்டணியால் வலுப்பெறும் என நம்பலாம்.

News September 1, 2025

இத்தோட போதும்.. தயாரிப்பை நிறுத்திய வெற்றிமாறன்!

image

திரைப்பட தயாரிப்பு என்பது மிகவும் அழுத்தம் நிறைந்த வேலை என்பதால் இனிமேல் படங்களை தயாரிக்கப் போவதில்லை என வெற்றிமாறன் அறிவித்துள்ளார். அவர் தயாரித்த ‘மனுஷி’ & ‘Bad Girl’ படங்களால் சென்சாரில் பெரும் சிக்கலை தான் சந்தித்ததாக கூறிய வெற்றிமாறன் இந்த பிரச்னைகள் தன்னை போன்ற சிறு தயாரிப்பாளருக்கு ஒத்து வராததால், இந்த முடிவை எடுப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி Bad Girl வெளியாகவுள்ளது.

error: Content is protected !!