News March 19, 2025
IPL-ல் இருந்து தோனி ஓய்வா? – சீக்கா கருத்து இதுதான்!

ஐபிஎல் ஃபீவர் தொடங்கிய பின் வெளியாகும் கிரிக்கெட் செய்திகளில் தோனி பெயரே அதிகம் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தோனிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ‘தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது அவருக்கே தெரியாது. இன்னும் சில ஆண்டுகள் கூட விளையாடுவார். தோனி நல்ல ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இப்போதும் No.1 கேப்டன் தோனிதான்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 8, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!
News July 8, 2025
4 ஆய்வறிக்கைகளை சமர்பித்த மாநில திட்டக்குழு

மாநில திட்டக்குழுவானது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் தாக்கங்கள், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதோடு, அரசு கொள்கை முடிவெடுக்கின்ற வகையில் பல துறைகளில் ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, சுரங்கங்கள் சீரமைப்பு, காலநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஆய்வறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.
News July 8, 2025
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்!

தேர்தல் பரப்புரையை <<16979878>>தொடங்கிய இபிஎஸ்<<>> கூட்டணியையும் விரைவில் இறுதி செய்யத் தீவிரம் காட்டியுள்ளாராம். அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, அமமுக, இந்தியக் குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்போது புதிதாக(நேற்று) <<16978111>>இந்திய ஜனநாயக கட்சி<<>> இணைந்துள்ளது. பாமக, தேமுதிக தங்களது நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.