News March 13, 2025

சிம்பு பட இயக்குநருக்கு க்ரீன் சிக்னல் காட்டுவாரா தனுஷ்?

image

ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் 51வது படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிம்பு ரசிகரான தனக்கு தனுஷையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த கதை ஒன்றை தனுஷிடம் கூறி இருப்பதாகவும் இயக்குநர் அஸ்வத் கூறியுள்ளார். சிம்பு பட இயக்குநருக்கு தனுஷ் க்ரீன் சிக்னல் காட்டுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்…!

Similar News

News March 13, 2025

XXX சோப் நிறுவனர் காலமானார்

image

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.

News March 13, 2025

திமுகவில் முறைவாசல் செய்பவர் ரகுபதி – ஜெயக்குமார்

image

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டிய இபிஎஸ், தன்னுடன் விவாதிக்க முதல்வருக்கு திராணி இருக்கிறதா என வினவி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இபிஎஸ் உடன் ஒரே மேடையில் விவாதிக்க தான் தயார் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், ‘திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் ரகுபதி, அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என காட்டமாக கூறியுள்ளார்.

News March 13, 2025

WARNING: மக்களே, இத மட்டும் செய்யாதீங்க

image

இந்தப் பழக்கங்கள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும்: *இரவு நீண்டநேரம் தூங்காமல் இருத்தல் *அதிகம் காபி அருந்துதல் *அடிக்கடி தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல் *மது அருந்துதல் *துரித & பாக்கெட் உணவுகள் எடுத்தல் *விட்டமின் B6, மக்னீசியம் குறைபாடு *உணவில் அதிகம் சர்க்கரை, உப்பு சேர்த்தல் *சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அடக்குதல் *போதுமான தண்ணீர் அருந்தாமல் இருத்தல். SHARE IT.

error: Content is protected !!