News April 28, 2024
SRH அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா CSK?

CSK – SRH அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. SRH அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால், அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களுக்கு மேல் குவித்தால், CSK-க்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். ஆனால், சேப்பாக்கம் மைதானம் CSK அணிக்கு சாதமாக இருக்கிறது. இதனால், பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் போதும், எளிதில் வெற்றிபெற முடியும்.
Similar News
News August 5, 2025
செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாடு.. 7 போலீசார் நீக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறப்பு குழு ஒன்று சாதரண உடையில் சென்று டம்மி வெடிகுண்டை செங்கோட்டைக்குள் வைத்துள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெடிகுண்டை கண்டுபிடிக்க தவறிவிட்டனர். இதனையடுத்து பணியில் அலட்சியமாக இருந்த 7 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
News August 5, 2025
கதை சொல்ல தொடங்கிய ப.சிதம்பரம்: தமிழிசை சாடல்

6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான <<17291439>>தகவலை ப.சிதம்பரம் <<>>சொல்கிறார் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் தோல்வி தெரிவதால் சிதம்பரம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் இப்போதே கதை சொல்ல தொடங்கி விட்டனர் எனவும் விமர்சித்துள்ளார்.
News August 5, 2025
WOW! காலையில் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தித் திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக, நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால், தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுபவர்களுக்கு மனச்சோர்வுடன், சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீங்கள் எப்படி?