News October 13, 2025
அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் CSK?

CSK கோச் ஸ்டீபன் ஃபிளமிங் சென்னைக்கு வந்து சில வீரர்களின் டிரையல்ஸை நேரடியாக பார்த்தது தெரியவந்துள்ளது. அதில் பிரித்வி ஷா, துஷார் ரஹேஜா, கார்த்திக் ஷர்மா, சல்மான் நிசார் ஆகியோர் இருந்ததாகவும், ஃபிளமிங் முன்னிலையில் பேட்டிங் செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. IPL மினி ஏலம் வரும் டிசம்பரில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இளம் வீரர்களை அணியில் சேர்க்க CSK முயற்சித்து வருவதாக தெரிகிறது.
Similar News
News October 13, 2025
விஜய் கூட்டணிக்கு வர அழைப்பு விடுத்தார்

திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது, எதிர்க்கட்சிகள் உதிரியாக இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். அப்படி எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்ற அவர், இதனை புரிந்துகொள்ள வேண்டியது விஜய்யின் கடமை என்றார். மேலும், OPS, டி.டி.வி.தினகரனுக்கும் இது பொருந்தும் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
வாரிசு நடிகர் என்ற பெயரை போக்க முயற்சிப்பேன்: துருவ்

தந்தையை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க முயற்சிப்பேன் என துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ‘பைசன்’ ஷூட்டிங்கில் காயம்பட்டதை விக்ரமிடம் சொன்னபோது, சினிமாவில் இதை பழகிக்கொண்டால் முன்னேறலாம் என்று கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், வாரிசு நடிகர் என்ற விமர்சனங்களை முறியடிப்பதற்காகவும், தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவும், இந்த வலி மிகுந்த பயணத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
Bussiness Roundup: H1B விசாக்களை குறைக்கும் TCS

*செப்டம்பரில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இரண்டரை லட்சம் கோடியாகி உள்ளதாக யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. *2030-க்குள் தனது பெண் பணியாளர்கள் விகிதத்தை 30% ஆக உயர்த்த SBI திட்டமிட்டுள்ளது. *H1B விசா தேவைகளை குறைத்து, உள்ளூர் அமெரிக்கர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக TCS தெரிவித்துள்ளது. *2024-25 நிதியாண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 7.75 லட்சம் டன்னாக இருந்துள்ளது.