News April 14, 2025

தவறை திருத்தி LSG-ஐ வீழ்த்துமா CSK

image

லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் LSG அணியை CSK இன்று எதிர்கொள்கிறது. பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருவதால் தொடர்ந்து 5 போட்டிகளில் CSK தோல்வியடைந்தது. இன்றை போட்டி மிக முக்கியமானது என்பதால், CSK தனது தவறை சரி செய்துக்கொண்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் தகுதிச் சுற்றுக்கு செல்ல அடுத்த வரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Similar News

News April 15, 2025

வருங்கால கணவர் கண்முன்னே…நேர்ந்த கொடூரம்!

image

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உ.பி.யில் இளம்பெண்னை (17) ஒருவரை அவரது வருங்கால கணவரின் கண்முன்னே 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை POCSO-வில் 8 பேர் கைதாகி இருக்கின்றனர். அவர்களில் கைதான, அகிலேஷ் பிரதாப் சிங் லோக்கல் BJP காஸ்கஞ்ச் பகுதியின் MLA-வுடன் நெருக்கமாக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.

News April 15, 2025

அடிக்கடி செயலிழக்கும் UPI: தீர்வு என்ன?

image

கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

News April 15, 2025

அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி!

image

அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?

error: Content is protected !!