News April 1, 2025
தவறுகளை சரி செய்யுமா CSK

மோசமான கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் என பல தவறுகளை செய்ததால் CSK அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக, தோனி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் பெரும் சர்ச்சையானது. இதனால், வரும் சனிக்கிழமை DCக்கு எதிரான போட்டியில், அனைத்து தவறுகளையும் சரி செய்தால் மட்டுமே CSK வெற்றிபெற முடியும். இல்லையென்றால், தகுதி சுற்றோடு வெளியேறும் என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
Similar News
News April 2, 2025
தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.
News April 2, 2025
CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <
News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.