News August 11, 2024

அணிக்கு தேவைப்படும் போது அழைப்பார்கள்: சஞ்சு சாம்சன்

image

இந்திய அணிக்கு தேவைப்படும் போது தன்னை நிச்சயம் அழைப்பார்கள் என சஞ்சு சாம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்து தன்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு அதிகப்படியான பயிற்சிகளை தற்போது எடுத்து வருவதாக தெரிவித்த அவர், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, தனது ஆட்டத்தை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

பெரம்பலூர்: 50,000 வாக்காளர்கள் நீக்கம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தற்போது வரை, 50,767 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார், மேலும் வாக்காளர் பட்டியல் மறு சரிபார்ப்பு பணிகள் 16-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் ஜன.15-ந் தேதி வரை வாக்காளர் பதிவு அல்லது உதவி அலுவலரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

image

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.

News December 6, 2025

திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

image

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.

error: Content is protected !!