News April 5, 2025
பிரசாந்திற்கு ஜோடியாகும் புட்ட பொம்மா?

மீண்டும் ஹீரோவாக தொடங்கி இருக்கும் பிரஷாந்த், ஹரியுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறாராம். அந்த படத்தில் பிரசாந்திற்கு ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர், சாய் பல்லவி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஹரி – பிரஷாந்த் கூட்டணியில் ஏற்கனவே ‘தமிழ்’ என்ற ஹிட் படம் வெளிவந்துள்ளது. பிரஷாந்திற்கு யார் கரெக்ட்டான ஹீரோயினாக இருப்பாங்க?
Similar News
News November 24, 2025
சித்தராமையா vs DKS: உச்சம் அடைந்த கோஷ்டி பூசல்

கர்நாடகா <<18364137>>காங்கிரஸில்<<>> கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. டிகே சிவக்குமாரை CM ஆக்க கோரி, அவரது ஆதரவு MLA-கள் 3-வது முறையாக டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். 2.5 ஆண்டுகள் சித்தராமையா, 2.5 ஆண்டுகள் டிகே சிவக்குமார் CM என தலைமை வாக்குறுதி கொடுத்ததாகவும், அதை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், அம்மாநில அமைச்சர்களை கார்கே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
News November 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒருகிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்கு முகத்தில் இருப்பதால், நம்மூரிலும் வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 24, 2025
SC-ன் 53-வது தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யகாந்த்?

ஹரியானாவின் ஹிசாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த இவர், பஞ்சாப், ஹரியானா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சல் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2019 மே மாதம் SC நீதிபதியானார். J&K 370 சட்டப்பிரிவு நீக்கம், பிஹார் SIR, பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் சூர்யகாந்த் அங்கம் வகித்திருந்தார்.


