News February 11, 2025

பும்ரா CTல் விளையாடுவாரா? இன்று தெரியும்

image

இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் BCCI இன்று இறுதி முடிவை எடுக்கும் என தெரிகிறது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியை அவர் தவறவிட்டால், அது IND அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.

Similar News

News February 11, 2025

3,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் மெட்டா

image

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகம் முழுவதும் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த பணி நீக்கம் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

News February 11, 2025

ATM PIN நம்பர் மறந்துவிட்டதா? மாற்ற ஈசி டிப்ஸ்!

image

*கணக்கு இருக்கும் வங்கியின் ATM மையத்தில், கார்டை சொருகியதுமே Forget PIN ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து, இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை கொடுத்தால், OTP வரும். அதனை பதிவிட்டு, PINஐ மாற்றலாம். * Netbankingல் ATM கார்டு ஆப்ஷனில் Change PINஐ கிளிக் செய்யவும். கார்டின் CVV, கார்டின் கடைசி சில நம்பர்கள், காலாவதி தேதி ஆகியவற்றைப் பதிவிடவும். பின்னர், OTPயை பதிவிட்டு, PINஐ மாற்றலாம்.

News February 11, 2025

ரீ-ரிலீசாகும் விஜய்யின் சச்சின்!!

image

விஜய் நடித்த ‘சச்சின்’ படம் வெளியாகி 20 ஆண்டுகளான நிலையில், கோடை கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரீ ரிலீசாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் ஜெனிலியா, வடிவேலு நடித்திருந்த படம் இன்னும் ஃபேன் ஃபேவரிட்டாக இருக்கிறது. இன்னும் ஒரு படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகும் நிலையில், இது ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.

error: Content is protected !!