News October 3, 2025
விஜய்யை இழுக்க புது ரூட் எடுக்கும் பாஜக?

கரூர் மேட்டரில் விஜய் மீது பாஜக Soft Tone எடுப்பதற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என பேசப்படுகிறது. இதற்காகதான் ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றிருந்தார் என்கின்றனர் விவரப்புள்ளிகள். ஆனால், பாஜக பி டீம் என சொல்வார்கள் என்பதால் தயங்குகிறாராம் தளபதி. எனவே, ஆந்திர DCM பவன் கல்யாணை வைத்து விஜய்யிடம் பேச பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. பாஜக எடுத்திருப்பதாக கூறப்படும் இந்த ரூட், ஒர்க் அவுட் ஆகுமா?
Similar News
News October 3, 2025
‘சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை’

தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மலையில் தாய் கண்முன்னே சிறுமியை ரேப் செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சாடினார். மேலும், தங்களை கொள்கை இல்லாத கூட்டணி என ஸ்டாலின் விமர்சிப்பதாக குறிப்பிட்ட EPS, திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
News October 3, 2025
35-45 வயதினரிடையே அதிகரிக்கும் இதய நோய்

இந்தியாவில் 35-45 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு, இதய நோய் பாதிப்பு 70% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 30,000 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு இதய நோய் ஏற்பட வேலைப்பளு, தொடர் மன அழுத்தம் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களில், 65% பேரின் தினசரி உடல் ரீதியான செயல்பாடு 30 நிமிடங்களுக்கும் குறைவு என தெரியவந்துள்ளது.
News October 3, 2025
விஜய்யின் இமேஜை ஒன்னும் பண்ண முடியாது: சிபி சத்யராஜ்

விஜய்க்கு ஆதரவாக சிபி சத்யராஜ் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்யை சத்யராஜ், மகள் திவ்யா சத்யராஜ் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அவரது இமேஜை கூட ஒன்னும் பண்ண முடியாது என்று குஷி படத்தின் காட்சியை பகிர்ந்துள்ளார். குடும்பமே எதிர்த்தாலும் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டதற்காக சிபிராஜுக்கு தவெகவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.