News March 18, 2024
பாஜகவுக்கு 10% வாக்கு கிடைக்குமா?

தமிழகத்தில் அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 10% வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும். அதேநேரம், மிகப்பெரிய வாக்கு வங்கி வைத்திருக்கும் அதிமுகவும் பாமகவும் இணைந்தால், வட தமிழகம் & கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெறும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 4, 2025
வீட்டில் இருந்தே செய்யலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வதற்கு ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் புதிய மென்பொருளை அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய முறையில், சொத்து வாங்குவோர், விற்போர் அவர்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு OTP வரும். இதனை பதிவு செய்த பிறகு விரல் ரேகையை பதிவு செய்து பத்திரத்தை பதிவு செய்துகொள்ளலாம். SHARE IT.
News December 4, 2025
BREAKING: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த TN அரசு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30 மணிக்குள் தீபத்தை ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இப்போது SC-யில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 4, 2025
அரசு அனுமதி மறுப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபத்தை ஏற்றினால் போதும் என 2014-ல் வழங்கப்பட்ட தீர்ப்பையே தமிழக அரசு பின்பற்றுவதாக அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவா அமைப்புக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் தமிழக அரசு எப்போதும் சட்டத்தின்படியே நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


