News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News December 10, 2025
பெரம்பலூரில் இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெனித்குமார் (31). இவருக்கும் இவரது மனைவி பாலஅபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெனித்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
சற்றுமுன்: அதிமுக பொதுக்குழுவில் ரத்த காயம்

சென்னை வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற EPS-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கடிதம் இல்லாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து பலர் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததால் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News December 10, 2025
அகிலம் ஆராதிக்க அரசன்.. (PHOTOS)

அடுத்தடுத்த தடங்கலுக்கு பிறகு, ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இதன் Exclusive ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸை பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘அகிலம் ஆராதிக்க அரசன் ஆனந்த பவனி’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


