News April 7, 2025
மீண்டும் தலைவர் ஆகும் அண்ணாமலை?

அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Similar News
News January 1, 2026
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: சசிகலா

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பழக்கம் அதிகரித்துள்ளது; இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என சசிகலா கேள்வி எழுப்பினார். ஒருபுறம் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறனர்; மறுபுறம் ரவுடிசம் தலை தூக்கியுள்ளது. இதில் இருந்தே தெரிகிறது CM ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பது என விமர்சித்த அவர், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் என்னுடைய வேலை என்றார்.
News January 1, 2026
2026 எப்படி இருக்கும்? கணிப்புகள் வெளியானது

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். 2025-ம் ஆண்டில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும், பூகம்பங்கள் ஏற்படும், வெள்ளம் வரும், வேலையின்மை அதிகரிக்கும் என கணித்திருந்தார். இந்நிலையில் 2026-க்கான இவருடைய கணிப்புகளை செய்தியாக தொகுத்துள்ளோம். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News January 1, 2026
காய்கறிகளின் விலை மளமளவென குறைந்தது

புத்தாண்டு நாளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேட்டில், 1 கிலோ பெரிய வெங்காயம் ₹30-க்கும், சின்ன வெங்காயம் ₹60 – ₹75-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், தக்காளி(₹40-₹50), உருளை கிழங்கு(₹20-₹25), பீன்ஸ்(₹30-₹40), கேரட்(₹40-₹45), பச்சை மிளகாய்(₹30-₹35) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதேபோல், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது.


