News April 7, 2025
மாநிலங்களவை எம்.பி.யாகும் அண்ணாமலை?

தமிழக பாஜக புதியத் தலைவர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கருதும் பாஜக மேலிடம், அவரை மாநிலங்களவை எம்.பி., ஆக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
Similar News
News September 15, 2025
செப்டம்பர் 15: வரலாற்றில் இன்று

*உலக மக்களாட்சி நாள். *1835 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை தொடங்கினார். *1891 – விடுதலை போராட்ட வீரர் செண்பகராமன் பிறந்த தினம். *1909 – முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். *1959 – தூர்தர்ஷன் டிவி சேவை டெல்லியில் ஆரம்பமானது. *1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
News September 15, 2025
வாக்கு திருட்டு பற்றி விசாரிங்க: முன்னாள் தேர்தல் ஆணையர்

வாக்கு திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பது மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
‘இளைய சூப்பர் ஸ்டார்’ ஆன தனுஷ்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், சினிமா துறையினர் என பலரும் பங்கேற்றனர். இந்த படவிழாவின் போது, தனுஷை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் ஒன்று தான் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. ‘இளைய சூப்பர் ஸ்டாரே’ என தனுஷை வர்ணித்து அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த வாசகம் மை பூசி அழிக்கப்பட்டது.