News December 20, 2024
அடுத்து வெங்கட் பிரபுவுடன் இணைகிறாரா அஜித்?

சிவா இயக்கத்தில் 5வது முறையாக அஜித் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவர் இயக்கிய ‘கங்குவா’ படம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே மீண்டும் அஜித்தை சந்தித்து வெங்கட் பிரபு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். இதன் காரணமாக இருவரில் யாருடைய இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Similar News
News July 5, 2025
CSK-க்கு இந்த 3 வீரர்கள் வேண்டும்: தோனி கோரிக்கை

IPL 2025, 5 முறை கோப்பை வென்ற CSK அணிக்கு பெரும் பின்னடவைக் கொடுத்தது. இதனால் 19-வது சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் (RR), GT-யில் இருந்து ராகுல் தெவாட்டியா & வாஷிங்டன் சுந்தரை வாங்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகத்திற்கு தோனி பரிந்துரைத்துள்ளாராம். காயம் காரணமாக ருதுராஜ் விலக, தோனி கேப்டன்சி வகித்த போதிலும், அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தது.
News July 5, 2025
ரியலிலும் பாகுபலியாக மாறிய பிரபாஸ்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் ஃபிஷ் வெங்கட் (Fish Venkat). இவர் சிறுநீரகக் கோளாறால் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். மேலும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான நிதி வழங்குமாறு அவரது மகள் ஸ்ரவந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், வெங்கட்டின் அறுவை சிகிச்சை செலவை முழுமையாக ஏற்பதாக பிரபாஸ் தெரிவித்துள்ளார். ₹50 லட்சம் வரை இதற்கு செலவாகுமாம்.
News July 5, 2025
அதிமுக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு: கவுதமி

அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார். இதுகுறித்து நடிகை கெளதமி, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் எல்லோரும் கை கோர்த்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என தவெகவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், சரியான திட்டமிடலுடன் இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.