News May 18, 2024
மோடிக்கு நெருக்கடி கொடுப்பாரா அஜய்ராய்?

மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக வாரணாசியில் அஜய்ராய் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கடந்த 2014 மற்றும் 2019 என 2 முறை மோடியை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். 2014இல் 7.34%, 2019இல் 14.38% வாக்குகளை பெற்று அவரால் 3ஆவது இடத்தையே பெற முடிந்தது. இந்த முறை அகிலேஷ் யாதவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால், கணிசமான அளவு வாக்குகளை அவர் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News August 27, 2025
அரசியல்வாதி போல் விஜய் நடக்க வேண்டும்: தமிழிசை

அரசியலுக்குள் விஜய் நுழைகிறார் என்றால், ஒரு நடிகரைப் போல் அல்லாமல் அரசியல்வாதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தொண்டர் தள்ளிவிடப்பட்டது தொடர்பாக <<17529771>>விஜய்<<>> மற்றும் பவுன்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை பேணப்பட வேண்டும் என்றார்.
News August 27, 2025
கொழுக்கட்டையின் கதை தெரியுமா?

புராணங்களின் படி, ஞானபாலி என்னும் அரசன், ருத்ரயாகத்தின் நடுவே ஒற்றைக்கண் பூதனாகி, உயிர்களை விழுங்க தொடங்கினான். தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தபோது, அவர் ஞானபாலியை கொழுக்கட்டை வடிவில் மாற்றி விழுங்கினார். அவன் பசியை தீர்க்கவே விநாயகருக்கு கொழுக்கட்டையை படைப்பதாக கூறப்படுகிறது. கொழுக்கட்டையின் தத்துவம்: இனிப்பு பூரணம் ஆன்மாவின் இனிமையையும், வெள்ளை மேலடுக்கு சுத்தமான மனதையும் குறிக்கிறது. SHARE IT.
News August 27, 2025
50% ஆஃபர்.. Redmi அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

Redmi ஃபோனுக்கான Battery-ஐ 50% தள்ளுபடியில் மாற்றிக் கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு Redmi ஆஃபரை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25 முதல் 30-ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் சென்டர்களில் இந்த சலுகையை பெற்ற முடியும். இந்த வாய்ப்பை தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அப்பறம் என்ன உடனே சர்வீஸ் சென்டருக்கு கிளம்புங்க.. Battery-ஐ மாத்துங்க.