News August 28, 2025
கலப்பு திருமணம் பாஜக ஆபிஸில் நடைபெறுமா? சீமான்

காதல் திருமணங்களுக்கு தங்களது கட்சி அலுவலகங்களை பயன்படுத்தலாம் என சிபிஎம் மற்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் பாஜக அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? அதைப் போன்று உயர் சாதி பெண்ணுக்கும், பட்டியல் சமூக பையனுக்கும் சிபிஎம் சார்பில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? என கேட்டுள்ளார்.
Similar News
News March 4, 2026
திமுக – காங்கிரஸ் இழுபறிக்கு முற்றுப்புள்ளியா?

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்து காங்., பின்வாங்கியுள்ளதாம். ப.சி., பேச்சுவார்த்தை நடத்தியும், சீட் விவகாரத்தில் திமுக விடாப்பிடியாக இருப்பதால், கூட்டணியில் காங்., வெளியேறவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், காங்., MLA-க்கள் டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால், கூட்டணியை தொடரவும், இன்று தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
News March 4, 2026
உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா ட்ரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது விமானத் தளத்தை US ராணுவம் பயன்படுத்த ஸ்பெயின் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது, தேவையான இடத்தில் போர் விமானங்களை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா டிரம்ப் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.


