News January 23, 2025
குக்கரில் மனைவி உடல்: வெளியான காரணம்

ஹைதராபாத்தில் மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்த கொடூர சம்பவத்தின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. சங்கராந்தியை (பொங்கல்) ஒட்டி தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என மனைவி மாதவி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மாதவியை கணவர் குருமூர்த்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை குக்கரில் வேக வைத்து ஏரியில் அவர் வீசியுள்ளார்.
Similar News
News August 24, 2025
நீலகிரி எம்.பி நிகழ்ச்சி நிரல் விபரம்

நீலகிரி எம்.பி ராசா வரும் ஆக.26 ஆம் தேதி கோத்தகிரி புனித அந்தோனியார் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஊட்டியில் துவக்கி வைத்தல், காலை 11:00 மணிக்கு ஊட்டியில் மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் திறப்பு, 11:30 மணிக்கு காந்தல் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட உருது பள்ளியை திறந்து வைக்கிறார்.
News August 24, 2025
உங்களுக்கு பிடித்த Evergreen படம் எது?

தமிழ் சினிமாக்கள் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுப்பதாக சமீபத்தில் AR முருகதாஸ் தெரிவித்திருந்தார். இதனை பலரும் ஏற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கற்றல் மற்றும் பொழுதுபோக்குடன் எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் இன்றளவும் Evergreen ஆக ரசிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களின் லிஸ்ட் மேலே இருக்கிறது. இதுபோன்று உங்களை இன்றும் மகிழ்விக்கும் Evergreen படம் எது?
News August 24, 2025
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு இவ்வளவா?

பணக்கார முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர CM <<17501452>>சந்திரபாபு <<>>நாயுடு முதலிடத்திலும், மேற்குவங்க CM மம்தா பானர்ஜி வெறும் ₹15.4 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்திலும் இருக்கின்றனர். இதற்கிடையில் CM ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டினர். ஸ்டாலின் ₹8 கோடி சொத்து மதிப்புடன் 14-வது இடத்தில் இருக்கிறார். நாட்டின் மொத்தமுள்ள 31 CMகளின் சொத்து மதிப்பு சுமார் ₹1,630 கோடி.