News January 31, 2025
மனைவி தவறான உறவு: குழந்தைக்கு கணவரே தந்தை

மனைவிக்கு இன்னாெருவருடன் உறவு இருந்தாலும், திருமணத்தின்போது பிறக்கும் குழந்தைக்கு கணவரே தந்தை என்று SC உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த SC, திருமணத்தின் மூலம் அவர்கள் தம்பதியாவதால், அக்குழந்தை அவர்களது சந்ததியாகக் கருதப்படுகிறது. எனவே அக்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அவரே தந்தை என்று கூறியது. மேலும் அந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டில் சாகும் வரை சிறை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிலிப்ராஜ் (30). இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் மேஸ்திரியிடம் வேலை செய்து கொண்டு அங்கேயே மற்ற தொழி லாளிகளுடன் தங்கி இருந்துள்ளார். 1.1.2011 அன்று சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் பிலிப்ராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News March 4, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $222.88 (இந்திய மதிப்பில் ₹20,426) குறைந்து $5,129.72-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $6 குறைந்து $83.21-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News March 4, 2026
திமுகவுக்கு இந்த அகம்பாவம் இல்லை: ரகுபதி

NDA கூட்டணி என்பது இடியாப்ப சிக்கல் போன்றது. அதில், யார் பெரியவர் என்பது இதுவரை தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதையும், திமுக கூட்டணியையும் ஒப்பிட முடியாது என்ற அவர், மக்களிடம் சாதனைகளை சொல்லியே வாக்குகளை பெறமுடியும் என்றார். மேலும், தேர்தலில் சவால்கள் இல்லை என்று அகம்பாவமாக சொல்ல முடியாது எனவும் திமுக எது வந்தாலும் சமாளிக்கும் என்றும் பேசியுள்ளார்.


