News April 20, 2025

மனைவியின் 4 காதலர்கள்.. கணவர் பரபரப்பு புகார்

image

4 காதலர்களுடன் சேர்ந்து மனைவி ரிடான்ஷி ஷர்மா தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உ.பி.யைச் சேர்ந்த கவுரவ் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 1,200 பக்க மொபைல் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள், வீடியோக்களுடன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள மனைவி திட்டம் போடுவதாகவும், குடித்துவிட்டு தன்னை அடிக்கடி அடிப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 10, 2025

இண்டிகோ விமான சேவை.. 10% வரை குறைக்க உத்தரவு

image

தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் 400க்கும் அதிகமான விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ளது. இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகளை 10% வரை குறைக்க DGCA உத்தரவிட்டுள்ளது. இது, இண்டிகோ நிறுவனம் தங்களது செயல்பாடுகளை சீராக்கவும், விமான சேவைகள் ரத்து செய்வதை குறைக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்பிரச்னையை சரிசெய்திட போர்க்கால அடிப்படையில் செயல்படுவதாக இண்டிகோ CEO கூறியுள்ளார்.

News December 10, 2025

சினிமாவுக்கு மொழி தேவையில்லை: கமல்ஹாசன்

image

பொழுதுபோக்கு துறையில் உலகின் முன்னணி தொடர்பு அமைப்பாக தமிழ் எண்டர்டெய்ன்மெண்ட் துறை உயர வேண்டும் என கமல் <<18516964>>ஜியோ ஹாட்ஸ்டார்<<>> நிகழ்ச்சியில் தெரிவித்தார். Squid Game என்ற இணைய தொடர் உலகம் முழுவதும் பலகோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாகவும், சினிமாவுக்கு மொழி தேவையில்லை எனவும் அவர் கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு கலைஞன் எளிதில் எல்லோரையும் தொடர்புகொள்ள முடிகிறது எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

News December 10, 2025

ராசி பலன்கள் (10.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!