News May 7, 2025
தாடியால் கணவரை பிரிந்த மனைவி.. மைத்துனருடன் ஓட்டம்

கணவர் தாடியுடன் இருந்தது பிடிக்காமல் அவரின் சகோதரருடன் மனைவி ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டை சேர்ந்த முகமது சாகீர், அர்சியை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அவர் தாடி வளர்த்தது அர்சிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியில்லாமல் இருந்த சாகீரின் தம்பி சபீருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இனி அவருடனே வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். சாகீர் புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
Similar News
News November 25, 2025
UK-ல் இருந்து லட்சுமி மிட்டல் வெளியேறுகிறாரா?

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல், UK-வில் எஃகு உருக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். இன்று உலகின் 104-வது செல்வந்தராகவும் உள்ளார். இந்நிலையில், UK-வில் குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் வாரிசு வரி உள்பட தொழிலதிபர்களுக்கான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், UK-வை விட்டு வெளியேறி, துபாயில் குடியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவருக்கு மாளிகை ஒன்றும் உள்ளதாம்.
News November 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 530 ▶குறள்: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். ▶பொருள்: ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
News November 25, 2025
தள்ளிப்போன திருமணம்.. ஸ்மிருதி எடுத்த முடிவு

கொண்டாட்டத்துடன் நடைபெற வேண்டிய ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தையின் உடல்நலக் குறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது காதலரான பலாஷ் முச்சலும் அதீத காய்ச்சலால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கஷ்டமான சூழலில், திருமணம் சார்ந்த பதிவுகளை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஸ்மிருதி நீக்கியுள்ளார். எனவே, ‘கவலைப்படாதீங்க மந்தனா’ என நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


